Monday, September 22, 2008

காலங்கள்


எனக்கான பொழுதுகளில் உன்னை பற்றியே சிந்தனை
களங்கமில்லா பார்வைகள் என்னில் உன்னை பதிய வைத்தன ..
உன் வழிகளில் எல்லாம் என் விழிகள்..
நியூட்டன் மூன்றாம் விதியை அதிகம் உணர்கிறேன் ...
கண்ணாடி முறைக்கின்றது....
நிறங்கள் கேலி செய்கின்றன ...
இரவெல்லாம் வெளிச்சம் .....
என் பேனா உன் பெயர் தனை மட்டுமே எழுதுகின்றது ...

Wednesday, July 9, 2008

ஆசை


மறக்க இயலா முகம் ...
அன்பாய் வருடும் விரல்கள் ...
கவலை நீக்கும் கனிவான மொழிகள் ...
எனக்காக காத்திருந்த நாட்கள் ...
பேரன்பினால் நெகிழ்வித்த தருணங்கள் ...
மடியினில் உறங்கிய சுகம் ...
இவை அனைத்தையும் இழந்து
இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் - நீ அருகில் இல்லாமல் ...?
மறு பிறவியிலும் பிறக்க ஆசைபடுகின்றேன் - உன் மகனாக .....!!!!!!!!!

Friday, April 18, 2008

காதல்


என் நினைவுகள் எனை விட்டு -- நகர்ந்தன

அவளின் மொழி அழகில்

வளையல்கள் சலசலக்க சலங்கைகள் சினிசினுங்க

புன்னகை பூக்கும் போது .....!!!!

பிரபஞ்சத்தின் பேரழகி அவள் மட்டுமே ....!!

என் தனிமைகளை சொந்தமாக்கினாய் ---பின்

இரவுகளை சொந்தமாக்கினாய் ...... என் சொல்வது

தடுமாறுகிறது இளமை ....!!!!

கையில் அகப்படும் காகிதங்களில்

கவிதை என்று கிறுக்க படுகின்றன --- என் உளறல்கள்

உன் சுடர் ஒளி பார்வயில் நின்று போகின்றன --- என் இயக்கங்கள் !!!

சம்மதத்தால் நிறுத்திவிடு என் கவிதைகளை ...

தப்பித்து கொள்ளட்டும் ---- தாய் மொழி

Wednesday, April 16, 2008

நினைவுகள்


பால்யத்தில் கண்ணீர் துடைத்தவள்

என் பள்ளி நாட்களில் நட்பு மலராய் மனம் வீசியவள்

அதிகாலை பொழுதையும் மஞ்சள் மாலையையும்

என்னில் அழகாக்கியவள்

பிறிதொரு நாளில் மொத்தமாய் விலகி சென்றால் --- குடும்பத்துடன்

சிறு வயதின் சலனங்கள் புரியவில்லை --- அப்போழ்து

ஆனால் நினைவுகள் மட்டும் நீங்காமல் நிழலாடி கொண்டிருக்கிறது ....

என்னில் நினைவாக விட்டு சென்றது

அவள் முகமும் அழகிய புன்னகையும் .....

இன்னமும் காத்து கொண்டிருக்கின்றேன்

என் இதயம் நிறைந்த அவளுக்காக ......?

பலன்

காதலில் விழுந்தேன்
கைப்பொருள் இழந்தேன்
வாழ்வினில் வீழ்ந்தேன்
ஒத்தடமாக மதுபானம்
இறுதியில் வரவேற்றது ----- மயானம் ....????????

Thursday, April 10, 2008

இளமை காலம்

கடந்த காலங்களில்
எதிர் காலம் அவள்தான் என்று
இழந்து விட்டேன் என்
நிகழ் காலங்களை

நிகழ்வு

சுற்றம் துறந்து மனைவி ஆனேன் அவனுக்கு
காதலினால்
கற்கண்டாய் அன்று அவன் பேசிய வார்த்தைகளில்
வீழ்ந்தேன்
இன்று கண்ணீரில் நனைகின்றன
முந்தனைகள் ................